மெரிட் றிவோட்ஸ என்பது என்ன?
மெரிட் றிவோட்ஸ எங்கும் பரந்துள்ள விந்தையானதோர் திட்டமாகும். அதனால், நடைமுறை அல்லது சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், வாழ்க்கையில் ஏற்படும் விசேட தினங்களின்போது மெரிட் றிவோட்ஸ வழங்கப்படும். மெரிட் றிவோட்ஸ கடன்களல்ல. அவற்றை நீங்கள் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை.
தகுதிப் பரிசுக்கு நான் எவ்வாறு தகுதி பெறுவது?
- நிகழ்வுக்கு 6 மாத காலத்திற்கு முன்னர் உங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச வரவாக தொடர்ச்சியாக ரூபா. 20,000/=பேணப்படுவது அவசியமாகும்.
அல்லது
- உங்கள் நடைமுறைக் கணக்கில் ரூபா. 10,000/= இனைத் தொடர்ச்சியாகப் பேணிவருவது அவசியமாகும்.
என்ன விதமான மானியங்களை நான் பெறமுடியும்?
நீங்கள் அல்லது நெருங்கிய உங்கள் குடும்ப அங்கத்தவர் இலங்கையில் அல்லது வெளிநாட்டில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால் ஏற்படுகின்ற செலவினை ஈடுசெய்ய கீழே விளக்கியுள்ள முறையின் பிரகாரம் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்ச கணக்கு மிகுதியாக ரூபா.20,000 - 50,000 ற்கும் இடையில் பேணப்பட்டிருந்தால், ரூபா. 50,000 வரை ஈட்டுத்தொகை வழங்கப்படும். (குறைந்தபட்ச மிகுதியைப் பொறுத்தது). அதன் பின்னர் உங்கள் கணக்கில் ரூபா.100,000/= ற்கு மேல் பேணப்பட்டால், ஒவ்வொரு மேலதிக 100,000/= ரூபாவிற்கும் ரூபா.10,000/= மேலதிகமாக வழங்கப்படும்.
கண் சிகிச்சையைப் பொறுத்தமட்டில் லென்ஸக்கு ஏற்படுகின்ற செலவு மட்டும் ஈடு செய்யப்படும்.
நீங்கள் அல்லது உங்கள் நேரடியான குடும்ப உறுப்பினர், உத்தியோகபூர்வ அல்லது பல்கலைக்கழக கல்வித்துறையின் இறுதிப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றால் (Merit or Class) இந்தப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவீர்கள். (விண்ணப்பதாரியினால் சிறந்த பெறுபேற்றுக்கான பத்திரம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.) உத்தியோகபூர்வமாக முடிவு வெளியிடப்படும் திகதியே நிகழ்வுக்கான திகதியாகும்.
மானியத் தொகையாக ரூபா.25,000/= வழங்கப்படும்.
- ஏதாவது சர்வதேச நிகழ்ச்சியில் வெற்றியீட்டுதல்
கணக்கு வைத்திருப்பவர் அல்லது அவருடைய நேரடியான குடும்ப உறுப்பினர்களில் யாராவது நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி ஏதேனும் சர்வதேச நிகழ்ச்சியில் வெற்றி ஈட்டினால் இந்த மானியத் தொகையினைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவராவார். சம்பந்தப்பட்ட போட்டியில் 1ஆம் அல்லது 2 ஆம் அல்லது 3ஆம் இடத்தினைப் பெற்றிருக்க வேண்டும். குழுக்களாகப் பங்கு கொள்ளும் போட்டியெனில் தனிப்பட்ட யாரும் இதற்காக விண்ணப்பிக்க முடியாது.
ரூபா.50,000/= நிலையான தொகையாக வழங்கப்படும்
- விளையாட்டு, நாடகம், சித்திரம், சங்கீதம் போன்ற தேசிய நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டல்
கணக்கு வைத்திருப்பவர் அல்லது அவருடைய நேரடியான குடும்ப அங்கத்தவர் யாரேனும், சம்பந்தப்பட்ட அதிகார சபையினால் அகில இலங்கை நிகழ்ச்சியாக வகுக்கப்பட்ட தேசிய நிகழ்ச்சியொன்றில் வெற்றியீட்டினால் இப்பணத்தொகைக்குப் பாத்தியதையுடையவர். மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் சர்வதேச நிகழ்வுகளாக இருந்தாலும் இத்தொகையினைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.
ரூபா.25,000/=நிலையான தொகையாக வழங்கப்படும்.
- துக்க சமயத்தில் உங்களுக்கு உதவியளித்தல்
கணக்கு வைத்திருப்பவருக்கு அல்லது நேரடியான குடும்ப அங்கத்தவருக்கு துக்கமான சம்பவத்தில் இழப்பு ஏற்பட்டால் வெகுமானமாக ரூபா. 25,000/= வழங்கப்படும்.
உமது புதிய கண்டுபிடிப்பானது தனியுரிமம் உள்ளதென பதிவாளரால் அடையாளங் காணப்பட்டால், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் அல்லது கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பரிந்துரையின் பேரில் இப்பணத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த மானியத்தின் தொகை: ரூபா.50,000/=
நீங்கள் திருமணம் செய்துகொள்ளும் போது கீழ்வரும் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கணக்கு மிகுதியாக ரூபா.20,000 - 50,000 ற்கும் இடையில் பேணப்பட்டிருந்தால், ரூபா.5இ000ஃஸ்ரீ வரை மானியத்தொகை வழங்கப்படும். (குறைந்தபட்ச மிகுதியைப் பொறுத்தது). அதன் பின்னர் உங்கள் கணக்கில் ரூபா.100,000/= ற்கு மேல் பேணப்பட்டால், ஒவ்வொரு மேலதிக 100,000/= ரூபாவிற்கும் ரூபா.5,000/= மேலதிகமாக வழங்கப்படும்.
கணக்குள்ள இருவர் திருமணம் செய்துகொள்கிறார்களெனில், யாராவது ஒருவரின் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- விபத்து அல்லது இயற்கை அனர்த்தம்
விபத்து அல்லது இயற்கை அனர்த்தத்தினால் உங்களுடைய வீடு பாதிப்புள்ளாகி நீங்கள் இடம்பெயர நேர்ந்தால் இதன் கீழ் விண்ணப்பிக்க முடியும். குறைந்தபட்ச மிகுதியாக ரூபா.20,000 - 50,000 ற்கும் இடையில் பேணப்பட்டிருந்தால், ரூபா.5,000/= வரை மானியத்தொகை வழங்கப்படும். (குறைந்தபட்ச மிகுதியைப் பொறுத்தது). அதன் பின்னர் உங்கள் கணக்கில் ரூபா.50,000/= ற்கு மேல் பேணப்பட்டால், ஒவ்வொரு மேலதிக 50,000/= ரூபாவிற்கும் ரூபா.5,000/= மேலதிகமாக வழங்கப்படும்.
சம்பவம் நடைபெற்ற இரண்டு வாரத்துக்குக்குள் இதனைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- உங்கள் 60வது பிறந்த நாளின் போது
கணக்கு வைத்திருப்பவரின் 60வது பிறந்தநாளின் போது பெறுமதி வாய்ந்;த கைக்கடிகாரம் பரிசுப்பொருளாக வழங்கப்படும்.
- உங்கள் குழந்தையின் பிறப்பு
கணக்கு வைத்திருப்பவரின் குழந்தை பிறக்கும்போது ரூபா. 5,000/= பரிசாக வழங்கப்படும்.
கணக்கு வைத்திருப்பவர் 50வது திருமண விழாவைக் கொண்டாடுவாராயின் ரூபா.5,000/= பரிசாகப் பெறுவதற்குத் தகுதியுடையவராவார். கணவன் மனைவி இருவருமே கணக்கு வைத்திருப்பவர்களாயின் ஒருவருடைய விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
என்னால் எத்தனை தடவைகள் தகுதிப் பரிசினைப் பெறமுடியும்?
விண்ணப்பித்த திகதியிலிருந்து 365 நாட்கள் வரையான காலப்பகுதிக்குள், ஏதேனும் ஒரு நிகழ்விற்கு, ஒரு தடவை மட்டும்.
கூட்டாகவோ தனியாகவோ எத்தனை கணக்குகள் வைத்திருந்து, எவ்வளவு தடவைகள் விண்ணப்பித்தாலும் ஒரு விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
ஆண்டுக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு பிரிவின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.
வாடிக்கையாளர்களின் நேரடி குடும்ப அங்கத்தவர்கள்
திருமணமானவராக இருந்தால் கணவன் அல்லது மனைவியுடன் 18 வயதிற்குட்பட்ட திருமணமாகாத பிள்ளைகள்.
திருமணம் ஆகாதவராக இருந்தால் பெற்றோரும் 18 வயதிற்குட்பட்ட திருமணமாகாத சகோதரன்களும் சகோதரிகளும்.
தகுதிபெறும் காலத்துக்குள் கணக்கில் பேணப்பட்ட குறைந்தபட்ச மிகுதியைப் பொறுத்த உரிமை கோரலுக்கான பணத்தொகை வழங்கப்படும்.
சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குள்ள தனிப்பட்டவர்கள் மட்டும் இத்திட்டத்திற்குத் தகுதியுடையவர்களாவர்.
இயற்கை அனர்த்தம் தவிர, ஏனைய சம்பவங்கள் நடந்த 3 மாத காலத்துக்குள் உரிமை கோரல் விண்ணப்பங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். இயற்கை அனர்த்தமெனின் இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு 2347777 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது அருகிலுள்ள செலான் வங்கிக் கிளையுடன் தொடர்பு கொள்ளவும். |